உடுவில் – மல்வம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 65 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

திருப்பலி நிறைவில் பங்கில் இவ்வாண்டு மறைக்கல்வி பணியில் 25 ஆண்டு யூபிலியை நிறைவுசெய்யும் 4 மறையாசிரியர்களுக்கான நினைவுப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இத்திருப்பலியில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிறாஜ் அவர்களும் இணைந்து செபித்தார்.

By admin