உடுவில், மல்வம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைத்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தை தரிசித்தி அங்கு இடம்பெற்ற சிறப்புரை, விளையாட்டு நிகழ்வுகள், கடல் குளிப்பு என்பவற்றில் பங்குபற்றினர்.

தொடர்ந்து சின்னமடு புனித செபமாலை அன்னை யாத்திரைதலம், கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம் ஆகியவற்றை தரிசித்ததுடன் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 35 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin