யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளையோரை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் மாணவர்களுக்கான கள அனுபவ பயணம் யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் மற்றும் மாணவர்கள் யாழ்ப்பாண பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களையும் மதத்தலங்களையும் பார்வையிட்டதுடன் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தமர்விலும் பங்குபற்றினர்.
வெகுஜன ஊடகங்கள் தொடர்பான விழிப்புணர்வை இளையோர் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தமர்வில் குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாமுனை, குடாரப்பு மற்றும் செம்பியன்பற்று கிராமங்களை சேர்ந்த 85ற்கும் அதிகமான இளையோர் மற்றும் மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.