இளவாலை மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து கூட்டொருங்கியக்க திருஅவை மற்றும் மேய்ப்புப்பணி பேரவை தொடர்பாக சிறப்புரையாற்றியதுடன் அருட்தந்தையர்கள், அருட்பணிசபை அங்கத்தவர்கனௌ பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin