இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் விக்டோரியா எல்விஸ் பிறஸ்லி அவர்கள் வளவாளராக கலந்து மறையாசிரியர்களை வழிப்படுத்தினார்.

தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 70 மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்ததுடன் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் யேசுதாஸ் அவர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

By admin