இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் கழக தலைவர் திரு. ஜேசுதாசன் அவர்களின் தலைமையில் ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 100ற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
போட்டி நிறைவில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ், யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், அருட்தந்தையர்கள், கழக அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

