இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.
கழக தலைவர் திரு. ஜேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் “மனுக்குல வளர்ச்சியின் அடித்தளமாகும் சமூகதொடர்பாடல்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் சிறப்பு நிகழ்வான “நவீன தொடர்பு சாதனங்கள் சமூகத்தில் விதைப்பது நன்மையா தீமையா” என்னும் தலைப்பில் விவாத அரங்கும் இடம்பெற்றது.
விவாத அரங்கின் தலைவராக யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து விவாதத்தை நெறிப்படுத்தி தொடர்பாடல் ஆண்டுக்கான சிறப்புரையையும் வழங்கினார்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருத்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

