இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் கல்லூரி அதிபர், அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் காலை, இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் இடம்பெற்றன.
திருநாள் திருப்பலியை நற்கருணைநாதர் சபை மாகாண முதல்வரும் கல்லூரியின் பழைய மாணவருமான அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியும், கல்லூரியின் 94ஆம் ஆண்டு அணியினரின் நிதிப்பங்களிப்பில் புனரமைப்பு செய்யப்பட்ட ஆசிரியர் ஓய்வறை திறப்பு விழாவும் கலாச்சார விளையாட்டுக்களும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.