இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் இளவாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் யூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரியின் இளவாலை பழைய மாணவர் சங்க தலைவர் திரு. பீற்றர் பியன்வெனு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்களுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டியும் தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கண்டி தேசிய வைத்தியசாலை குழந்தை வைத்தியரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. பரமாநந்தன் சஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. அல்பிறட் கமலாஸ் கிறேசியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் தொழினுட்ப அதிகாரியும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. பாக்கியநாதர் தியோஜினாஸ் மற்றும், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய ஆசிரியரும் Northern Sports college இயக்குநரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. கங்காரட்ணம் சசிகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.