இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன்விழா சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், முன்னாள் பங்குத்தந்தையர்கள் மற்றும் மன்ற தலைவர்களுக்கான கௌரவிப்பு, “விழுது விடும் விருட்சம்” பொன்விழா மலர் வெளியீடு என்பன இடம்பெற்றன.
கலைநிகழ்வுகளில் சிறப்பு நிகழ்வாக மன்ற முன்னாள் தலைவர் திரு. றொபின்சன் அவர்களின் நெறியாள்கையில் 60 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு வீரப்பெண் யூதித்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “வீர மங்கை” வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் நீண்ட காலமாக ஆலய செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும் இசையமைப்பாளர் திரு. யேசுதாஸ் அவர்களுக்கு “ இளம் இசை வல்லோன்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மானிப்பாய் சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளரும் மன்ற முன்னாள் தலைவருமான திரு. ஸ்ரீபன் நிக்ஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஆசிரியர் திரு. பேனாட் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

