இளவாலை புனித யூதாததேயு ஆலயம் கட்டப்பட்டதன் பொன்விழா நிகழ்வுகள் வருகின்ற சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு தை மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை புதுவருட தினத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுவருட திருப்பலியை தொடர்ந்து யூபிலி கொடியேற்றப்பட்டு பொன்விழா ஆண்டு செயற்பாடுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
யூபிலி கொடியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

