இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி தை 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தையும் மன்ற காப்பாளருமான அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் மன்ற தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள், மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இளையோருக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளருமான அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை இரத்தவங்கி மருத்துவ அதிகாரி திரு. குணபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. கந்தையா ஜெசீதன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

