இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை ஆலய வளாகத்தில் பொயிட்டி பங்கு பீடப்பணியாளர்களுடனான விளையாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து நோயாளர் தரிசிப்பும் நடைபெற்றதுடன் பீடப்பணியாளர்கள் தங்கள் சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையில் நோயாளர்களுக்கு அன்பளிப்புக்களையும் வழங்கிவைத்தனர்.

By admin