இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், பாடத்திட்ட ஆயத்தம் தொடர்பான விளக்கவுரைகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 75 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயணத்தில் மாணவர்கள் பருத்தித்துறை பிரதேசத்தை தரிசித்து மணற்காடு, தும்பளை கெபி, பருத்தித்துறை கடற்கரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

By admin