இளவாலை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து கலை மாலைபொழுது நிகழ்வும் இடம்பெற்றன.

இக்கலைமாலை பொழுதில் பாடல்கள், நடனம், மேலைத்தேய நடனம் போன்ற கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வின் நிறைவில் பங்குமக்களுக்கான அன்பிய விருந்தும் பரிமாறப்பட்டது.

By admin