இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து 75 பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து மாலை கலைநிகழ்வுகளும் சிறார்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

By admin