இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது.

மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு நிகழ்வுகளாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. அனுராஜ் அவர்களின் நெறியாள்கையில் “பாஞ்சாலி சபதம்” நாட்டுக்கூத்தும் மன்ற நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் திரு. றொபின்சன் அவர்களின் நெறியாள்கையில் “நெஞ்சில் நீ இட்ட முள்” குறுநாடகமும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் வலிகாம கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கலாவண்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தமிழ்மாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மன்ற மகளிரவை முன்னாள் உறுப்பினரும் ஆதரவாளருமான திருமதி மிலானி ஜெயந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin