இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய மாணவர்களின் ஆங்கில தின நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் வித்தியாலய மாணவிகளின் ஆக்கங்களை தாங்கிய FAMILIAN OLIVE நூலின் முதலாவது இதழ் வெளியீடும் ஆங்கில மன்றத்தின் புதிய இலச்சினை அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளில் மாணவர்களின் ஆங்கில மொழிப்புலமையையும் கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் பேச்சுக்கள், பாடல்கள், மேலைத்தேய இசை வாத்திய நிகழ்ச்சிகளுடன் வில்லியம் சேக்ஸ்பியர் அவர்களின் OTHELLO நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் ஆங்கில தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி திணைக்கள ஆங்கில பாட பிரதி கல்வி பணிப்பாளர் செல்வி றதனி பாலசுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாம வலயக்கல்வி ஆசிரிய ஆலோசர் திரு. சிவசுப்ரமணியம் ஸ்ரீதர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வித்தியாலய இளவாலை பழைய மாணவர் சங்க பொருளாளர் திருமதி. மேரி கிளாரா பிரியதர்சினி விஜயரட்ணம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சியான்ஸ்ரன் ஜெனிஸ் அவர்கள் கலந்து ஆசிச்செய்தியும் வழங்கியிருந்தார்.

By admin