இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம் ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ் அழகக்கோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய வின்சென்ட் டி போல் சபைக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் 30 உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin