இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ. சத்துரங்க அபேசிங்க அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை NEFAD மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டு நிறுவன முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தருடன் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் தொழிற்சாலை எதிர்நோக்கு மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகாண பணிப்பாளர் கெங்காதரன் அவர்களும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டார்.
அத்துடன் நெவாட் நிறுவன பணியாளர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை வவுனிக்குளம் கல்வாரிப் பூங்காவில் நடைபெற்றது.
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்வாரிப் பூங்கா பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், தியான உரை என்பன இடம்பெற்றன.