கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியை நடாத்த இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு குழுவாக விண்ணப்பிக்க முடியுமெனவும் இப்போட்டியில் பங்குபற்றும் ஒரு குழுவில் ஆகக்குறைந்தது 10 உறுப்பினர்களும் கூடியது 15 உறுப்பினர்களும் பங்குபற்ற முடியுமெனவும் திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன்; 3 நிமிடங்களை உள்ளடக்கிய புதிய படைப்பாக இப்பாடல் இருப்பதுடன் இப்போட்டியில் பங்குபற்றும் குழு திணைக்களம் வழங்கும் பொதுப்பாடலையும் பாட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் குழுவின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், WhatsApp செயலி இலக்கம் என்பவை உள்ளடங்கலாக விண்ணப்ப படிவத்தை ஆங்கிலத்தில் தயாரித்து அதனுடன் அருட்தந்தை, முதல்வர் அல்லது நிறுவனத்தலைவரின் சிபாரிசு கடிதத்தை இணைத்து வருகின்ற ஜப்பசி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 3ஆம் மாடி, இல 180, டீ.பீ.ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.