இலங்கை கல்வித்துறை உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்ற அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்டுள்ளார்.

தற்போது பெரிய பண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றிவரும் அருட்தந்தை அவர்கள் கடந்த காலங்களில் புனித பத்திரிசியார் கல்லூரியில் கனிஸ்ட இடைநிலை பிரிவு தலைவாராகவும் முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயம், மன்னார் தேவன்பிட்டி மகாவித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கோல் தேசிய கல்லூரி ஆகியவற்றில் பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin