இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருக்கும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் நாட்டில் பல்வேறு இடங்களிலும் தற்போது நிலவும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் குறிப்பாக மணவர்களின் கல்விநிலை பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித், பேரவை தலைவர் பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா மற்றும் பேரவை ஆயர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையிலுள்ள மறைமாவட்ட ஆயர்கள், வருடத்திற்கு மூன்று தடவைகள் ஆயர் பேரவையாக ஒன்றுகூடி திருஅவை விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதுடன் நாட்டில் நிலவும் பிரச்சனைகளிலும் கரிசனைகாட்டி அவற்றை தீர்பதற்கான வழிகாட்டல்களையும் வழங்கிவருகின்றனர்.