இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை வத்திகானின் நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மொன்சிஞ்ஞோர் மிஹைட்டா பிளாஜ் அவர்களுடனான சந்திப்பில் இதற்கான அழைப்பினை கடிதமூலமாக கையளித்தார்.
திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் மொனாக்கோ, அல்ஜீரியா, அங்கோலா, எக்குவடோரியல் கினி, கமறூன், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

