இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ‘இறை அழைத்தல்” கருத்தமர்வு ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் மறைமாவட்ட, திருவுள பணியாளர் சபை மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் கலந்து தங்கள் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் 300 வரையான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

By admin