குமிழமுனை மற்றும் இரணைமாதாநகர் பங்குகளின் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
குமிழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இரணைமாதாநகர் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் குருமட மாணவர்கள் இணைந்து கருத்துரைகள் பாடல், குழுச்செயற்பாடுகள் ஊடாக பீட்ப்பணியாளர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.
