செபமாலைத்தாசர் சபை ஸ்தாபகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை இறையடியார் தோமஸ் அடிகளாரின் நினைவுத்திருப்பலி யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மறைமாவட்டங்களின் இறையடியார்கள் இலத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு தினத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட வெண்டுமென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்றைய தினம் இறையடியார் தோமஸ் அடிகளாரின் சிறப்பு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

1886ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வில் பிறந்த இறையடியார் தோமஸ் அவர்கள் 1904ஆம் அண்டு குருமடத்தில் இணைந்து 1912ஆம் ஆண்டு அமலமரித்தியாகிகள் சபை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியப்பணியாற்றி வந்த இவர் ஆயர் பேரருட்தந்தை கியோமர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1928 மாசி மாதம் 02ஆம் திகதி செபமாலைதாசர் சபையை உருவாக்கி 1948ஆம் ஆண்டு கன்னியர்களுக்கான சபையையும் உருவாக்கினார்.

1964ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி இறைவனடி சேர்ந்த தோமஸ் அடிகளார் 2006ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 03ஆம் திகதி இறையடியார் பட்;டத்தை பெற்றுக்கொண்டார்.

By admin