மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு போட்டி யூலை மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்பும் இடம்பெற்றன.

மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திரு. முகுந்தன், வவுனியா பிரதேச செயலாளர் திரு. பிரதாபன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையில் வவுனியாவின் பல இடங்களை சேர்ந்த தமிழ், சிங்கள மொழி பேசும் மாணவர்கள் கல்விகற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin