கிறிஸ்தவ ஒன்றிப்பு வார சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் நட்புறவு சந்திப்பு நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை வேண்டி செப வழிபாடும் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலும் இடம்பெற்றன.
கலந்துரையாடலில் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளில் எதிர்கால கிறிஸ்தவ ஊழியர்கள் சந்திக்கவுள்ள சவால்கள், மற்றும் தீர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் “கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில்” யாழ். குடாநாட்டிலுள்ள இரண்டு இறையியல் கல்லூரி சமூகத்தினரும் இணைந்து, தம்மிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பை முன்னெடுத்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

