வட்டக்கச்சி பங்கிற்குட்பட்ட இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

27ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை இருதயதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin