மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில் 36 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin