இரணைமாதாநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து ‘புனித செபமாலை மாதா பந்தி’ என்னும் பெயரில் புதிய பந்தியை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பந்திக்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மத்திய சபை தலைவி சகோதரி மரியநாயகி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இரணைமாதாநகரில் ‘புனித செபமாலை மாதா பந்தி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இப்பந்தி யாழ். மறைமாவட்டத்தின் 60ஆவது பந்தியாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin