இயேசு மரி அன்பின் சபை அருட்சகோதரிகளுக்கான முதல் வார்த்தைப்பாட்டு நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இரத்தினபுரி மறைமாவட்டம் கேகாலை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை ஜெயராஜ் இராசையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் கனகசிங்கம் இக்னேஸியா தர்சினி மற்றும் சாள்ஸ் துஸ்யந்தினி ஆகியோர் தமது முதல் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.