உடுவில் பிரதேசத்தில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி மற்றும் இல்ல தலைவி அருட்சகோதரி றூபினி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட திருக்குடும்ப கன்னியர் சபை நிறுவுனர் பீற்றர் பியன்வெனு நோ ஆய் அவர்களின் உருவச்சிலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் மகிழ்வின் வெளிப்பாடாக ஆர்க் குடும்பத்தினரால் கேக் வெட்டப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவ்அரங்க நிகழ்வில் கலைநிகழ்வுகளும், இல்லத்தில் பணியாற்றிய அருட்சகோதரிகள் மற்றும் பங்குத்தந்தையர்களுக்கான கௌரவிப்புக்களும் பொன்விழா மலர் வெளியீடும் நடைபெற்றன.

பொன்விழா மலரை திருக்குடும்ப கன்னியர் சபை யாழ். மகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.

ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லம் ஆரம்பிக்க காரணகர்த்தாவாக திகழ்ந்த பியூல் என்பவரின் குடும்ப அங்கத்தவராகிய திருமதி சாளினி பியூல் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin