கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளனத்தில் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான Cool டெனிஸ் போட்டி தை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளன மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 2 மாணவர்கள் Red ball போட்டியில் முதலிடத்தையும் தரம் 4 மாணவர்கள் Orange ball போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் தரம் 5 மாணவர்கள் Green ball போட்டியில் காலிறுதிச் சுற்று வரையிலும் முன்னேறினர்.

