மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரும் நெடுந்நீவு மண்ணின் மைந்தனுமான பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களின் நினைவாக நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆயர் கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்களுக்கான கிளித்தட்டு, கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் மற்றும் காற்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றதுடன் ஆயர் கிண்ணத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கல்விசார் போட்டிகள் மற்றும் விளையாட்டுக்களில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அலோசியஸ் அன்ரோ டெனீசியஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin