மன்னார் மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் யோசப்வாஸ் நகரில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை ஆயர் அவர்களின் நினைவாலயத்தில் கிராம மக்களால் மலரஞ்சலி இடம்பெற்றதுடன் ஆயரின் நினைவாக இசை கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட பாடல்கள் அன்றைய நாள் முழுவதும் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து மாலை நினைவாலயத்தில் ஆயரின் கொடியேற்றப்பட்டு ஆயரின் உருவச்சிலைக்கு பங்குத்தந்தையால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

