2016ஆம் ஆண்டு யாழ். மறைமாவட்டத்ததில் நடைபெற்ற ‘புதிதாய் வாழ்வோம்” மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களிலொன்றான ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை சம்பந்தமான விதிமுறைகளை பங்குகளில் இறுக்கமாக கடைப்பிடுக்கும்படி ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயருடனிணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம் ஆவணி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்டத்தில் வருகின்ற 2026ஆம் ஆண்டை சமூகத்தொடர்பு ஆண்டாக நடைமுறைப்படுத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டதுடன், ஆலயங்களில் ஒலிபொருக்கி பாவனை, வீதியோரங்களில் சுருபங்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

By admin