இந்நியாவிலிருந்து வருகைதந்த சலேசியன் கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி தேவதாஸ் மாகிறட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு மாசி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் உரோம் நாட்டிலுள்ள மொன்பேர்ட் அருட்சகோதரர்களின் உதவி தலைவர் அருட்சகோதரர் தனராஜ் மற்றும் சபையின் இந்தியா திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜோன் பிறிட்டோ ஆகியோரும் ஆயர் அவர்களை மாசி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

