இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரசேகரன் தலைமையிலான வைத்தியர்களும் ஆயர் அவர்களை ஐப்பசி மாதம் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் பற்றியும் அதற்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

