திருவுள பணியாளர் சபையின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் முன்னாள் மறையாசிரியருமான அருட்சகோதரர் அந்தோனி மருசலின் அவர்கள் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் 1970ஆம் ஆண்டு தனது முதலாவது வாக்குத்தத்தத்தை சபையில் நிறைவேற்றி 1982ஆம் சபையின் நிரந்த நிலையை அடைந்ததுடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களிலும் ஆன்மீகப் பணிகளாற்றியுள்ளார்.

அத்துடன் இவர் யாழ். மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை ஜெறோம் எமியானுஸ்பிள்ளை அவர்களால் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு மறையாசிரியர் பயிற்சியையும் பெற்றுக்கொண்டார்.

அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று இறைபணியாற்றி நல்லதொரு பணியாளராக எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin