திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா – அவர்களின் அன்புத்தந்தையும், ஈழத்தின் தென்மோடி கூத்துமரபின் மூத்த ஆளுமையும், திருமறைக்கலாமன்றத்தின் நாட்டுக்கூத்துப்பிரிவின் நீண்டகால வளவாளருமான திரு. அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ் – அண்ணாவியார் மனோகரன் – அவர்கள் புரட்டாதி மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

தனது 07ஆவது வயதில் நாடகத்துறையில் கால்பதித்த இவர் 15ற்கு மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களுடன் பல ஒப்பாரிப்பாடல்கள், நாடகங்கள், பாடல்களையும் எழுதியுள்ளதுடன் கலைத்துறைக்கு ஆற்றிய பணியை கௌரவித்து கலாபூஷணம், கலைக்குரிசில், யாழ் ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

அன்னாரின் வாழ்வுக்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin