டி லா சால் சபை அருட்சகோதரர் யூஸ்ரஸ் அமரஜோதி அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய இவர் பாகிஸ்தான் நாட்டில் ஆசிரியர், ஆன்மீக தலைவர், ஆலோசகர், விடுதி காப்பாளர், நிர்வாக மேற்பார்வையாளர், ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளி முதல்வர், சகோதரர்களின் சமூக இயக்குநர் மற்றும் அனாதை இல்ல இயக்குநராகவும், பப்புவா நியூ கினி நாட்டில் ஆசிரியர், ஆலோசகர் மற்றும் சமூக பணியாளராகவும், சிங்கப்பூர் நாட்டில் ஆசிரியராகவும் ஸ்பெயின் நாட்டில் இளம் லசாலிய மாணவ பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் இலங்கை நாட்டில் சென் . பெனடிற் கல்லூரி ஆசிரியராகவும் விடுதி காப்பாளராகவும் தென் சூடான் நாட்டில் ஆசிரியர் சமூக இயக்குநர் மற்றும் முதல்வராகவும் கென்னியா நாட்டில் டிலாசால் இளம் அருட்சகோதரர்களின் துணை இயக்குநராகவும் இந்தோனேசியா நாட்டில் டி லா சால் கத்தோலிக்க பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் இளம் லசாலியா குழு ஒருங்கிணைப்பாளராகவும்; பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin