போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி சிப்பிரியான் வரப்பிரகாசம் அவர்கள் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1962ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து விடுதிகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையம், முன்பள்ளிகள் ஆகியவற்றில் பெறுப்பாளராக சேவையாற்றியதுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திலும் பணிபுரிந்துள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

 

By admin