கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஜொய்ஸ் மாறி அவர்கள் ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1981ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 44 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் மன்னார் முருங்கன், அடம்பன், மூதூர் ஆகிய இடங்களில் கல்விப் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 23 வருடங்களாகவும் ஆசிரியரிப் பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin