மாகாண அமலமரித்தியாகிகள் சபை குருவும், மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லூக்கால் றெஜினி யூட் அவலின் அவர்கள் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

2015ஆம் ஆண்டு குருவாக திருதிலைப்படுத்தப்பட்ட இவர் கொக்கிளாய் அமதிக்களம், ஸ்கந்தபுரம் அமதிவனம், இயக்கச்சி நேசக்கரங்கள், வவுனியா அமதியகம் ஆகிய இடங்களிலும் மன்னார் இலுப்பக்கடவை புனித அந்தோனியார்புரம் பங்கின் முதலாவது பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin