ஆனைக்கோட்டை புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.