இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன் விழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட ஆண்களுக்கான திறந்த மரதன் ஓட்டப்போட்டி தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் 25 பேர் பங்குபற்றியிருந்ததுடன் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த பிரதீபன் அவர்கள் முதலாமிடத்தையும் போயிட்டி பிரதேசத்தை சேர்ந்த அன்ரனி பொனிபஸ் அவர்கள் இரண்டாமிடத்தையும் ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த தனுசியன் அவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin