வலிகாம கல்வி வலய கத்தோலிக்க கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா புரட்டாதி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.

வலிகாம கல்வி வலய கத்தோலிக்க கிறிஸ்தவ ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வில் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களுக்கான கௌரவிப்பு, உரைகள் என்பவற்றுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாம கல்வி வலய நிர்வாக பிரதிகல்வி பணிப்பாளர் திரு. சஞ்சீவன், வலிகாம கல்வி வலய ஆங்கில பாட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. யூட் கருணாகரன், மல்வம் – உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன், தென்னிந்திய திருச்சபை போதகர் திரு. ராஜ்குமார், சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி சயந்தன் சிவசக்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin