அளம்பில் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்கள் யாழ்ப்பாண பிரதேசத்தை தரிசித்து யாழ். புனித மரியன்னை பேராலயம், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், யாழ்ப்பாணம் கோட்டை அகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 42 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.